சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கண்புரை 82%, விழித்திரை பாதிப்பு 5.6 சதவீதம், நீரழிவு நோய் விழித்திரை பாதிப்பு 1சதவீதம், கண்ணீர் அழுத்த நோய் பாதிப்பு 1.3%, மற்றவை 10.1 சதவீதம், மோத்லதமாக 14.3% குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கண் கண்ணாடி மூலமாக பார்வை சரிசெய்ய வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த வருடம் இதுவரையில் 27 லட்சத்து 90 ஆயிரத்து 193 பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு லட்சத்து 214 குழந்தைங்களுக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மீதமுள்ள பள்ளி குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு இந்த வருட இறுதிக்குள் மூன்று லட்சம் குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
