தமிழக அரசியலில் பரபரப்பு..! விஜய் எடுத்த முக்கிய முடிவு… மகிழ்ச்சியில் தொண்டர்கள்…!!

By Soundarya on கார்த்திகை 21, 2025

Spread the love

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக விஜய் பரப்புரை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் சேலத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி என்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி கேட்டு கட்சி சார்பில் சேலம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் போஸ் மைதானம், கோட்டை மைதானம், கெஜ்ஜல் நாயகன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி கோரியுள்ளார்.

டிசம்பரில் சேலத்தில் இருந்து   தனது பரப்புரையை மீண்டும் தொடங்கவுள்ளார். டிச.4-ல் திருவண்ணாமலை தீப நாளாக இருப்பதால் பரப்புரை மேற்கொள்ள போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், மாற்று தேதியை இறுதி செய்யும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் 10 ஏக்கர் நிலத்தை பரப்புரைக்கு இறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.