பீகாரில் NDA கூட்டணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அனைவருக்கும் 3 மாதம் செல்போன் ரீசார்ஜ் இலவசம் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறாராம். இப்படி ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்க தற்போது இந்த மோசடி அரங்கேரி வருகிறது.
இந்நிலையில் இந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. அரசு இதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
