செங்கல்பட்டு மாவட்டம் சிலாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவருடைய மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் வெங்கடேசன் வீட்டுக்கு வந்த சரண், உன்னுடைய மகளை சென்னையில் காளியம்மன் கோவிலில் அருகே வெட்டி கொன்று விட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதுமிதாவின் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதனையடுத்து தலைமுறைவாக இருந்த சரணை கைது செய்து விசாரித்ததில் திருமணத்திற்கு பிறகு மதுமிதா செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இது சரணுக்கு படிக்கவில்லை. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட மதுமிதாவிடம் பேசிய ஒருவரை சரண் வெட்டிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமப்வதன்று கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி மனைவியை பைக்கில் அழைத்து சென்றுள்ளார் சரண். அங்கு மதுமிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
