கர்ப்பிணி பெண்களே ரூ.11000 பணம் கொடுக்கும் அரசு… இந்த திட்டம் தெரியுமா..? உடனே விண்ணப்பிக்கவும்..!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்பது கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மத்திய அரசு வழங்கும் ஒரு சிறப்பான நிதியுதவித் திட்டம். 2017 ஜனவரி 1 முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டம், மிஷன் சக்தியின் கீழ் இயங்குகிறது. இது மகப்பேறு, குழந்தை வளர்ப்பின்போது பெண்களுக்கு ஏற்படும் ஊதிய இழப்புக்கான ஒரு பகுதி ஊதிய இழப்பீட்டை வழங்குவதுடன் பாதுகாப்பான குழந்தை பிறப்பு, நல்ல ஊட்டச்சத்துடன் கூடிய உணவு நடைமுறைகளுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்துகிறது. 2013 ஆம் ஆண்டில், இந்தத் திட்டம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 இன்  கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், முதல்முறையாக கர்ப்பிணியாகும் பெண்களுக்கு 11,000 ரூபாய் பணம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பட்டியலின அல்லது பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பணமானது 2 தவணைகளாக வழங்கப்படும். PMMVY.WCD.GOV.IN- என்ற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பெறுங்கள்.