தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDI) சார்பாக, தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அகர்பத்தி (ஊதுபத்தி) மற்றும் பூஜை பொருட்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் சுயதொழில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி வரும் நவம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் உள்ள ஈக்காட்டுத்தாங்கலில் இருக்கும் EDI அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்தப் பயிற்சியில், 3-இன்-1 அகர்பத்தி, மூலிகை அகர்பத்தி, சாம்பிராணி, கற்பூரக் கேக், பூஜை எண்ணெய், ரோஜா நீர் மற்றும் பித்தளை/வெள்ளி சுத்திகரிப்பு திரவங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கப்படும்.
இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தகுதியுடையவர்கள் அனைவரும் இதில் சேரலாம். விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் கிடைக்கும். பயிற்சிக்கு முன்பதிவு செய்வது அவசியம். மேலும் விவரங்களுக்கும் முன்பதிவுக்கும் www.editn.in என்ற இணையதளத்திலோ அல்லது 9360221280 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். பயிற்சியின் முடிவில் அரசுச் சான்றிதழ் வழங்கப்படும்.
