தமிழக மக்களே..! ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசாக ரூ.5,000.. வெளியானது புதிய அப்டேட்…!!

By Soundarya on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலமாக 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுகின்றது. இன்னும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு ஏழு மாதங்கள் மட்டுமே இருப்பதால் இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க ஆளும் கட்சியான திமுக முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்காளர்களை கவர்வதற்காக வருகின்ற பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுகளுக்கு தலா 5,000 ரூபாய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பீகார் தேர்தலில், மகளிருக்கு தலா 10,000 வழங்கியதால் தான் NDA கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதனால், 2026 சட்டபேரவை தேர்தலை கருத்தில் கொண்டு திமுக அரசும் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும், நிதி சூழலை அறிய அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அந்த நாளிதழிழ் கூறப்பட்டுள்ளது.