காலையிலேயே இபிஎஸ்-க்கு ஷாக்… அதிமுகவில் இருந்து திடீரென விலகிய முக்கிய புள்ளி… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 20, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் நாளுக்கு நாள் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கட்சியிலிருந்து பலரை இபிஎஸ் நீக்குவதும், கட்சியிலிருந்து அவர்களாகவே விலகி செல்வதும் என தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட தனக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களை மொத்தமாக அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கி இருந்தார். அதேசமயம் கட்சியிலிருந்து பலரும் தொடர்ந்து விலகி வருகிறார்கள்.

இந்நிலையில் 2026 தேர்தல் நெருங்கும் நிலையில் கட்சி தாவல்கள் அதிகரித்து வருவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் பாஜக மற்றும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் சாமிநாதன் மற்றும் அசனா ஆகியோர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தன. இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது புதுச்சேரி அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.