தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே குஷிதான். கடந்த மாதம் தொடர்ந்து நான்கு நாட்கள் தீபாவளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக காலாண்டு விடுமுறையும் வந்தது. இதனிடையே இந்த மாதம் அரசு விடுமுறையே இல்லாத நிலையில் அடுத்த மாதம் மொத்தமாக அரையாண்டு விடுமுறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி நான்கு வரை தொடர்ந்து 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையாகும். அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வு அட்டவணைகள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
