பள்ளிக்கு செல்லும் வழியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12th படித்து வந்த மாணவியை மறித்த சேராங்கோட்டையை சேர்ந்த இளைஞர் முனியராஜ் காதலிக்க வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்த நிலையில் கழுத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
