தேனியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி ஆண்டிப்பட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி 52 வயது நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருவரும் ஒன்றாக இருப்பதை வீடியோ எடுத்த 16 வயது சிறுவன் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் வீடியோவை வெளியிட மாட்டேன் என்று கூறி சிறுமியை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். ஆண்டிபட்டி அருகே உள்ள ராய வேலூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றார். அந்த சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த 52 வயதாகும் பிச்சைமணி என்பவர் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியை உடலுறவுக்கு இணங்க வைத்துள்ளார். பிறகு அந்த சிறுமியுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டார்.
இதனிடையே இருவரும் தனிமையில் இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளான். தன்னுடைய ஆசைப்படி நடக்காவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று சிறுமியை மிரட்டியுள்ளான். அதனால் பயந்து போன சிறுமி சிறுவனின் ஆசைக்கு இணங்க சிறுவனும் சிறுமியுடன் பல முறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை அழைத்துக்கொண்டு தாயார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறிய நிலையில் அதிர்ச்சி அடைந்த தாய் உடனே சிறுமியிடம் விசாரித்த போது நடந்த அனைத்தையும் விவரமாக கூறியுள்ளார். இதைக் கேட்டு மனம் உடைந்த தாயார் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை ஏமாற்றிய பிச்சைமணி மற்றும் சிறுவனையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
