தமிழகத்தில் குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 2 மற்றும் 2A) பணியிடங்களில் 625 காலி பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது. முன்னதாக சார்பதிவாளர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடுதலாக 625 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது..
