தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கான நிதி ஏற்பாடுகளை செய்யுமாறு நிதித்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டிருப்பதாக தமிழக அரசின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்கம் போல பச்சரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்த மகிழ்ச்சியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
