கனவை நோக்கி ஓடும் என்னை ஏன் குறி வைக்கிறார்கள்…? கண்ணீர் விடும் நடிகை கயாடு லோஹர் …!!

By Soundarya on கார்த்திகை 18, 2025

Spread the love

கடந்த 2021-இல் ‘முகில் பேட்டை’ கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர்.   இன்று தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக இருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக இதயம் முரளி படம் தமிழில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக டிராகன் படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகை கயாடு லோஹருக்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், “என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பரவும் அவதூறு கருத்துக்கள் வேதனை அளிக்கிறது. எந்த தவறும் செய்யாமல் கனவை நோக்கி ஓடும் என்னை ஏன் குறிவைக்கிறார்கள்” என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.