பெண்ணுடன் தனிமையில் இருந்த ஏட்டு…! கையும், களவுமாக பிடித்த கணவர்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2025

Spread the love

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கொடுக்கல் வாங்கல் தொடர்பான புகார் அளிக்க வந்த இளம்பெண் ஒருவருக்கும், அங்கு ஏட்டாகப் பணியாற்றிய காவலர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்தப் பெண் தன் வீட்டில் தனிமையில் இருந்தபோது, அந்த ஏட்டு அங்கு சென்று தனிமையில் இருந்துள்ளார். இதை அறிந்த அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட சிலர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அப்போது ஏட்டு அங்கிருந்து தப்பி ஓட, ஆத்திரமடைந்தவர்கள் அவரது இருசக்கர வாகனத்தை அடித்துச் சேதப்படுத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆமத்தூர் போலீசார், அந்த டூவீலரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஏட்டுவை ஆயுதப்படைக்குப் பணியிட மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.