தனுசு ராசிக்கு செல்லும் செவ்வாய்…! இந்த 3 ராசிக்கார்களுக்கு மெகா ஜாக்பாட்…! உங்க ராசி இருக்கான்னு பாருங்க….!!

By Devi Ramu on கார்த்திகை 18, 2025

Spread the love

தைரியம், வலிமை, வீரம் மற்றும் செல்வத்தின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் கிரகம், வரும் டிசம்பர் 28ஆம் தேதி குரு பகவானின் ராசியான தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். நட்பு கிரகங்களான குரு மற்றும் செவ்வாயின் இந்தச் சஞ்சாரம், பல ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும், அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டுவர வாய்ப்புள்ளது. இதனால் மூன்று ராசிக்காரர்கள் அதிகப்படியான நன்மைகளைப் பெற உள்ளனர்.

சிம்மம்:

   

சிம்ம ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் நான்காம் வீட்டிற்குப் பெயர்ச்சியாவதால், அவர்களின் வாழ்க்கை முறை மேம்படும். வாகனம் அல்லது அசையாச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்களுக்கு நிதி ஆதாயம் அதிகரிக்கும்.

   

விருச்சிகம்: 

 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் இரண்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால், செல்வம் மற்றும் பேச்சாற்றல் மேம்படும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், குடும்ப வாழ்க்கையில் அன்பும் நல்லிணக்கமும் செழிக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு, செவ்வாய் முதல் வீட்டிற்குக் கடந்து செல்வதால், தைரியம், தன்னம்பிக்கை, மற்றும் சமூக அந்தஸ்து உயரும். நிதி நிலைத்தன்மை கிடைப்பதுடன், வாழ்க்கைத் துணையின் ஆதரவும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.