தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு… அதிமுக கூட்டணியில் இணையும் 3 முக்கிய கட்சிகள்… செம குஷியில் துள்ளும் எடப்பாடி….!

By Nanthini on கார்த்திகை 18, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்பதை மிகுந்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்திருந்தாலும் மேலும் பல கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மறுபக்கம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் விஜய் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. தனது கட்சியில் நிர்வாகிகள் பலரை நீக்கினாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் NDA கூட்டணியை இறுதி செய்ய இபிஎஸ் தீவிரம் காட்டி வருகின்றார். அதன்படி நேற்று ஒரே நாளில் பாமக (அன்புமணி ஆதரவு), தமாகா, தேமுதிக தலைவர்களை அதிமுக தலைமை சந்தித்துள்ளது. சேலத்தில் இருக்கும் ஈபிஎஸ் உடன் ஜி கே வாசன் மற்றும் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ சதாசிவம், மதுரையில் பிரேமலதாவுடன் ஆர்பி உதயகுமார் சந்தித்து பேசினர். இதை சந்திப்பு மூலமாக கூட்டணி இறுதி வடிவம் பெறுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.