“மிகுந்த மனவேதனை” சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழப்பிற்கு TVK தலைவர் விஜய் இரங்கல்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

தெலுங்கானா மாநிலத்திலிருந்து சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு புனித பயணம் மேற்கொண்ட 42 பேர், பேருந்து விபத்தில் இன்று  உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,”42 பேர் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

இந்த சோகமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைவதற்கு இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.