இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் ஒரு சிறிய பிரச்சனை என்றால் கூட தற்கொலை முடிவை தான் நாடுகின்றனர். ஆனால் தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது என்பதை யாரும் அறிவதில்லை. வீட்டில் சண்டை, படிக்கும் இடத்தில் ஏதாவது பிரச்சனை என ஒரு சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட தற்கொலை முடிவை நாடுகிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் சுசில் நகரை சேர்ந்த அசோக் என்ற 18 வயது இளைஞர் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே அசோக் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலை செய்வதற்கு முன்பு instagram-ல் அவர் ஒரு ஸ்டோரியையும் வைத்துள்ளார். அதில் முடிவே ஆரம்பம் என்று பதிவிட்டுள்ளார். உடனே இது குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் அசோக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென instagram-ல் ஸ்டோரி வைத்துவிட்டு அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
