காதலியிடம் பேச செல்போன் இல்லை… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு துடிதுடிக்க 24 வயது இளைஞர் செய்த கொடூரம்… சினிமாவையே மிஞ்சும் திரில்லிங் சம்பவம்…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியை அடுத்த சூலை மேனி பகுதியை சேர்ந்த சரஸ்வதி (55) என்பவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவருடைய இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகின்றனர். இதனிடையே சரஸ்வதி தன்னுடைய வீட்டின் மேல் போர்ஷனை வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டை சுத்தம் செய்வதற்காக மாடிக்கு சென்ற போது அவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மேலே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரஸ்வதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரஸ்வதி இறக்கும்போது அவர் அணிந்திருந்த தோடு மற்றும் செயின் என எதையுமே காணவில்லை. ஒருவேளை இந்த கொலை நகையை கொள்ளையடிக்க நடந்து இருக்கலாம் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்ற 24 வயது வாலிபர் சரஸ்வதியை கொலை செய்து நகை பறித்து கொண்டு தப்பியது தெரியவந்தது.

   

சரஸ்வதியின் செல்போனில் இரண்டு புதிய நம்பருக்கு பேசி போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதையும் கண்டு போலீசார் அந்த நம்பரை ஆராய்ந்தனர். அதில் அந்த போன் சிக்னல் சென்னை அருகம்பாக்கம் பகுதியை காட்டிய நிலையில் அப்பகுதியில் ஆட்டோவில் படுத்திருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வெங்கடேசன் பல திடுக்கிடும் உண்மைகளை கூறியுள்ளார். அதாவது தனது செல்போன் உடைந்ததால் மாத தவணை கட்டுவதற்கு முடியாமல் இருப்பதாலும் தன் காதலிக்கு செல்போன் பேசுவதற்கு இல்லாததாலும் சரஸ்வதியின் நகைகளை கொள்ளை அடித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

   

இதற்காக திட்டமிட்டு சரஸ்வதி வரும் நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த அறிவாலை எடுத்து சரஸ்வதியை வெட்டி கொலை செய்துவிட்டு 5 சவர நகையை பறித்து கொண்டு தப்பி சென்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து வெங்கடேசன் அடகு வைத்த நகைகளை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். செல்போன் வாங்குவதற்காக இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது