தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் இதுவரை தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது. சமீபத்தில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்த நிலையில், ஜனவரி மாதத்தில் கடலூர் மாநாடு நடைபெறும் சமயத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என பிரேமலதா அறிவித்திருந்தார். அதற்கு முன்பாக அல்லது அதன் பிறகு கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று சஸ்பென்ஸ் ஆக அவர் தெரிவித்தார். அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் திமுக அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என அவரது தொண்டர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட வேண்டுமென அவர் தலைமையில் மதுரையில் நடைபெற்ற தேமுதிக பூத் முகவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
