2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் கூட்டணி மற்றும் சுற்றுப்பயணம் என தற்போது அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன. இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதேசமயம் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள விஜயை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யுடன் எந்த விதமான கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “விஜய் முதலில் களத்திற்கு வந்து, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். விஜய் குறித்த கேள்விகளுக்கு தேமுதிக பதிலளிக்க தேவையில்லை. அதற்கு அவரேதான் பதிலளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
