திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் தனியாக வசித்து வந்தவர் சரஸ்வதி (55). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டு, அவரது நகைகள் மற்றும் செல்போன் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு வழக்கு பதிவு செய்தார்கள்.
இந்த விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (26) என்பவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதாவது திருடு போன செல்போன் சென்னையில் சிக்னல் காட்டியதை அடுத்து, போலீசார் வெங்கடேசனை சுற்றி வளைத்தனர். விசாரணையில் தான் குற்றத்தை செய்ததை வெங்கடேசன் ஒப்புக்கொண்டார்.
