1 இல்ல 2 இல்ல 1000 பேர்… கொத்தாக தூக்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி… செம ஹேப்பியில் வேல்முருகன்…!!

By Soundarya on கார்த்திகை 16, 2025

Spread the love

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் கட்சித்தாவலில் ஈடுபட்டு வருகிறர்கள். அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் நேற்று  நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைப்பு விழாவில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் MLA  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், ‘தமிழக வாழ்வுரிமை கழக கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு, தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்துள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.