சென்னை கொளத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்பியம் பகுதியில் உள்ள காமராஜர் நகர் மாநகராட்சி பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை வியாசர்பாடியை சேர்ந்த குணசேகர் என்பவர் கொண்டு வந்து மாணவிகளுக்கு வழங்கிய போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவியை பள்ளியின் கழிவறைக்கு குணசேகரன் அழைத்துச் சென்றார். அங்கு வலுக்கட்டாயமாக அந்த மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மாலை வீட்டுக்குச் சென்ற சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறிய நிலையில் உடனே பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குணசேகரனை கைது செய்து விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
