வேத ஜோதிடத்தில் கூறப்பட்டது போல கிரகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளையில் தனது ராசியை மாற்றும். அதன்படி கிரகங்களின் தளபதியாக பார்க்கப்படும் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ராசியை மாற்றுவார். தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் குருவாக இருக்கும் செவ்வாய் தற்போது விருச்சிக ராசியில் பயணிக்கின்றார். அடுத்து பிறக்கப் போகும் டிசம்பர் மாதம் முதல் தனுசு ராசியில் பயணிப்பார். இந்த வருடத்தின் இறுதியில் தனுசு ராசிக்கு செல்லும்போது 12 ராசிகளில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க உள்ளார். இதனால் அந்த ராசிக்காரர்கள் பயனடைய போகிறார்கள். 18 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் அரிய செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதுவிதமான தைரியம் வரும். அதனால் அவர்கள் வீரமானவர்கள் போல தெரிவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எந்தவித நோய் நொடிகளும் வராது. திருமண வரன் கைகூடும்.
மேஷம்:
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அடைந்த பிறகு அதிர்ஷ்டங்கள் பல கிடைக்கும். பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். உங்களுடைய குடும்பத்தில் இவ்வளவு நாட்களாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். அமைதியாக இருந்து சாதிக்கும் சாதனையாளராக நீங்கள் மாற போகிறீர்கள்.
மீனம்:
இந்த ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் புதிய வேலைகள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல பெயர் உண்டாகும். தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் சிறகடித்து பறக்க போகிறீர்கள். மருத்துவத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது என்பதை மனதில் வைத்து நீங்கள் இந்த சமயத்தில் பலனை காணப் போகிறீர்கள்
