“அம்மா எனக்கு பிடிக்கல” அடிக்கடி வீட்டிற்கு வரும் அம்மாவின் கள்ளக்காதலன்… மனமுடைந்து போன 13 வயது மகன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் கள்ளத்தொடர்பால் கணவரை பிரிந்த அந்த இளம்பெண், 13 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தாயின் கள்ளக்காதலன் அடிக்கடி வீட்டுக்கு வருவது அந்த சிறுவனுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.

மேலும் சிறுவன் அவர்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் மற்றும் சிறுவனின் தாய் இருவரும் அந்த சிறுவனை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து சிறுவனை தந்தை மீட்டு புகார் செய்ததில், காவல்துறை இருவரையும் கைது செய்தது.