வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசால் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் பெண்களுக்காக பொங்கல் பரிசு வழங்கும் பணியை அரசு இப்போதே தொடங்கிவிட்டது. அதன்படி பொங்கல் பரிசு வழங்கும் பணியை தமிழக அரசு இப்போதே தொடங்கிவிட்டது. இன்று ரேஷன் கடைகளில் இலவச வேட்டி, சேலை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
இதனையடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேஷ்டி, சேலைகளை ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கத் தொடங்கியுள்ளார்கள். மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை குறித்தும் அரசு விரைவில் அறிவிக்கபட உள்ளது.
