திராவிட கட்சிகளான திமுக, அதிமுக தங்களுடைய கட்சியை வலுப்படுத்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யும் தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரியில் தனது கட்சியை வலுப்படுத்த தொடங்கியுள்ளார். இந்த நிலையில், புதுச்சேரி பாஜக முன்னாள் MLA சாமிநாதனும், காரைக்கால் அதிமுக முன்னாள் MLA அசனாவும் தவெகவில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இரண்டு பேருமே புஸ்ஸி ஆனந்துக்கு மிக நெருங்கிய நண்பர்கள். எனவே அவர்களுக்கு தவெகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
