அதிரும் அரசியல்..! போடி தொகுதியை குறி வைக்கும் ஸ்டாலின்… ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஓபிஎஸ்…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

போடி தொகுதியை கைப்பற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். பெரிய குளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம், தொடர்ந்து போடி தொகுதியை இந்த முறை  திமுக கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வலியுறுத்துவதாக வந்த செய்தி தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ் முதல்வர் மு க ஸ்டாலினின் கனவு எப்போதும் பலிக்காது என்று பதில் அளித்துள்ளார்.