2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று… தற்கொலை செய்து கொண்ட தாய்…. நெஞ்சை உலுக்கும் சோகம்….!

By Nanthini on கார்த்திகை 15, 2025

Spread the love

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் நவ்கம் பகுதியை சேர்ந்த ஜெயஸ் என்பவருடைய மனைவி அஸ்மிதா சோலங்கி (32) தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது சோலங்கி தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பிறகு வீட்டில் உள்ள அறையில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இரண்டு பிள்ளைகளையும் கொன்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.