அடுத்த ஷாக்..! பீகாரில் நடந்த வாக்குபதிவில் சந்தேகம்… தில்லு முல்லு நடந்திருக்கு… பகீர் கிளப்பிய சபாநாயகர் அப்பாவு…!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

நெல்லை மாவட்டம் பணங்குடி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சபாநாயகர் அப்பாவு பேசுகையில், பீகார் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றதற்கு தமிழக சட்டப்பேரவை தலைவர் என்ற முறையில் தேர்தல் ஆணையாளர் ஞானேஷ்குமாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். SIR புதிய சாஃப்ட்வேர் தேர்தல் கமிஷனால் இணைக்கப்பட்டதால் அந்த மாநிலத்தில் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றுள்ளது .

6 சதவீதம் அளவுக்கு சாப்ட்வேர் இணைக்கப்பட்டதன் மூலம் வாக்களித்துள்ளதாக தெரிகிறது. இதில் சந்தேகம் உள்ளது. தேர்தல் ஆணையம் தன்னை நிரபராதி என்று உறுதி செய்து நிரூபிக்க வேண்டும். அதனை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தில்லுமுல்லு தமிழகத்தில் நடைபெற வாய்ப்பு இல்லை. மீண்டும் இரண்டாவது முறையாக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி மலரும் என்று கூறியுள்ளார்.