“இனி லேட் பண்ண கூடாது…” ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து…! மகள்கள் கவனிக்காததால் கோவிலுக்கு எழுதி கொடுத்த ராணுவ வீரர்…!!

By Devi Ramu on கார்த்திகை 14, 2025

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கோணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (65). முன்னாள் ராணுவ வீரரான விஜயனின் மனைவி கஸ்தூரி அரசுப் பள்ளி உதவி தலைமை ஆசிரியையாக இருக்கிறார். மனைவி கஸ்தூரியைப் பிரிந்து தனியே வசித்து வந்த விஜயனை, அவரது இரண்டு மகள்களும் முறையாகக் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், படவேட்டில் தனக்குச் சொந்தமான இரண்டு வீடுகளின் சொத்து பத்திரங்களை, படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் உண்டியலில் செலுத்திவிட்டார்.

ஆனால், அந்தச் சொத்துக்களைக் கோயில் பெயருக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஜயனின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், விஜயன் மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் நேரில் சென்று, அந்தச் சொத்தை உடனடியாகக் கோயிலுக்கு மாற்றும்படி மீண்டும் வலியுறுத்தினார்.

   

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி, விஜயன் கடந்த முன்தினம் களம்பூர் பத்திரப்பதிவு அலுவலகம் சென்று, சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள அந்த இரண்டு வீடுகளையும் முறையாகக் கோயிலுக்குப் பத்திரப்பதிவு செய்து கொடுத்தார். அதற்கான ஆணையைத் தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் பழனிசாமியிடம் அவர் வழங்கினார்.