“மக்களின் மனதை திருடியிருக்கிறோம்” மாபெரும் வெற்றிக்கு பின் பிரதமர் மோடி நெகிழ்ச்சி…!!

By Soundarya on கார்த்திகை 14, 2025

Spread the love

பிகாரில் பாஜக கூட்டணியானது பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மக்களின் மனதை திருடியிருக்கிறோம். மாபெரும் வரலாற்று தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். இனி RJD அரசு திரும்ப வரப்போவதில்லை.

பெண்கள், இளைஞர்களின் வாக்குகளால் அவர்களை வீழ்த்தியதாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்திற்கு பிழையற்ற வாக்காளர் பட்டியல் அவசியம் என்றும், தேர்தல் ஆணையம் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..