நம்மில் பலர் என்னுடைய ஒரு வாக்கா வெற்றியை தீர்மானிக்க போகிறது என்று ஏளனமாக பேசுவதுண்டு. ஆனால் பிகாரில் சந்தேஷ் தொகுதி முடிவு ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு உணர்த்தும். பிகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த நிலையில், நிதிஷ் குமாரின் JDU வேட்பாளர் ராதா சரண் ஷா சந்தேஷ் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் அவரை எதிர்த்து போட்டியிட்ட RJD வேட்பாளர் திபு சிங்கை விட 27 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். NDA கூட்டணி இதுவரை 195 தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் 9ல் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 30 தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் 4ல் முன்னிலையில் உள்ளது.
