சென்னை புது வண்ணாரப்பேட்டை இளம்பெண்ணுக்கு சமூக வலைதளத்தில் லிபின் ராஜ் அறிமுகமானார். இந்நிலையில் நட்பு காதலாக மாறியது. இதனையடுத்து வீடியோ அழைப்பில் நிர்வாணமாகப் பேசச் சொல்லி, தெரியாமல் புகைப்படங்கள் எடுத்தார். பின்னர் பெரியமேட்டில் தங்கும் விடுதிக்கு வராவிட்டால் படங்களை வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்த பெண் அங்கு சென்றதும் இரு முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
ஆனால் மூன்றாவது முறை மறுத்ததால் நிர்வாண படங்களை தாயின் செல்போனுக்கு அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த தாய் திருவொற்றியூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து பாலியல் பலாத்காரம், மிரட்டல், நம்பிக்கைத் துரோகம் பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். பின்னர் விசாரணையில் பெண்ணை ஏமாற்றியது கன்னியாகுமரி செட்டிவளை புதுக்குளத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லிபின் ராஜ் எனத் தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் கைது செய்து, வேறு பெண்களிடம் இதுபோல் நடந்துள்ளாரா என விசாரிக்கின்றனர்.
