தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக, ஓபிஎஸ், டிடிவி தினகரன் கட்சியினர் அடுத்தடுத்த திமுகவில் இணைந்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மேற்கு அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர், ஓசூர் மாநகர கிழக்கு மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி உள்ளிட்டோர் அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். மேலும் வரும் ஞாயிற்றுக்கிழமை இவர்களின் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
