வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையை ஒட்டிய பேரணாம்பட்டு நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர். புதிதாகக் கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் கடந்த சில மாதங்களில் மூன்று முறை சுவாசக் கருவியான நெபுலைசர் திருடப்பட்டது.
நிர்வாகம் புகார் செய்யாமல் புதியவை வாங்கி வைத்தது. நேற்று அதிகாலை ஒரு ஆணும் பெண்ணும் நோயாளிகளாக வந்து, பொது பயன்பாட்டு நெபுலைசரைத் திருடிச் சென்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இக்காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
