ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்த வீட்டிலிருந்து காலி செய்துவிட்டு தற்போது நந்தனத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வீடும், முதல் தளத்தில் அலுவலகமும் செயல்பட உள்ளதாம். முன்னதாக அரசு பங்களாவை காலி செய்த பிறகு ஆழ்வார்பேட்டை, தி.நகர் என அடுத்தடுத்து தன்னுடைய இருப்பிடத்தை மாற்றி வருகிறார்.
ஆன்மிகத்தில் அதிகளவில் ஈடுபாடு கொண்ட ஓ.பன்னீர் செல்வம் ஜோதிடர் கூறியதன் பேரிலேயே தற்போது வீட்டை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
