சமீபத்தில் தமிழர் முன்னேற்ற படைத்தலைவர் வீரலட்சுமி,தமிழக வெற்றி கழகம் செய்த ரவுடிசம் தான் கரூரில் 41 பேர் உயிரிழக்க காரணம். களத்தில் நின்று மக்களை காப்பாற்றுபவர்களை நிஜ ஹீரோ. கரூர் துயரத்திற்கு பிறகு விஜய் கட்சியில் அனைவருமே ஓடி ஒளிந்து கொண்டனர். மக்களுக்காக புரட்சிகரமான போராட்டம் நடத்திய விஜய் சிறைச்செல்ல தயாரா என்று வீரலட்சுமி கேள்வி எழுப்பி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பியது.
இந்நிலையில் விஜய் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், உங்களை அரசியல், கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனத்தில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஒருமையில் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களுடைய ரசிகை ஒருவர் என்னுடைய கண்முன்னே இறந்ததை பார்த்த ஆத்திரத்தில் தான் அவ்வாறு பேசினேன் என விளக்கமளித்துள்ளார்.
