தமிழகத்தில் விட்ட ஆட்சியை [மீண்டும் இடிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக போராடி வருகிறார். கட்சியை பலப்படுத்த பல அதிரடியான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி அதிமுக முக்கிய நிர்வாகியும், கவுன்சிலருமான நாகஜோதியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி நகராட்சி சேர்மன் பரிதா நவாப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக நாகஜோதி என்பவர் வாக்களித்தார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்பின் பதவியை சொந்த கட்சியினரே பறித்தார்கள். வரும் தேர்தலில் கிருஷ்ணகிரியில் கட்டாயம் வெற்றி பெற திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
