நிதி நிறுவனம் நடத்தி 500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் அரசியல் தலைவரும் பாஜக ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியே வந்தார். ஆனால் ஜாமீன் நிபந்தனைப்படி 100 கோடி ரூபாய் வைத்து தொகை செலுத்தாததால் அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று நேற்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்னும் சற்று நேரத்தில் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
