எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆன பிறகு தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்து வருகின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பல வியூகங்களை வகுத்து வருகிறார். அதேசமயம் தனக்கு எதிராக கட்சியில் குரல் கொடுப்பவர்களை ஒவ்வொருவராக அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கி வருகின்றார். சமீபத்தில் கூட செங்கோட்டையன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். மறுபக்கம் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கிய நிர்வாகிகளை இணைக்கும் படி பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள். ஆனால் அதற்கு இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை.
மாறாக விஜய், சீமான் மற்றும் பிரேமலதா கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தார். அதிலும் இவர்களில் விஜய் மீது மட்டும் அசாத்திய நம்பிக்கை இருந்தது. ஆனால் இவர்களின் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்தில் முடிவுக்கு வந்துவிட்டது. இதனால் வருத்தம் அடைந்த எடப்பாடி அதிமுகவையே மீண்டும் வலுப்படுத்தலாம் என்ற நோக்கத்தில் உள்ளார். அதன்படி தினகரன், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு டம்மி பதவி வழங்கிய ஓட்டுக்காக மட்டும் கட்சிக்குள் ஓரமாக உட்கார வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கெல்லாம் ஒத்துவரும் பட்சத்தில் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக கட்சிக்குள் சில முக்கிய தலைகள் பேசி வருகிறார்கள். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் வெளியேறியவர்கள் தங்களுக்கு எந்த பதவி வழங்கப்படுகிறது என்பதை பார்த்து தான் மீண்டும் அதிமுகவில் இணையும் முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது. அப்படியானால் ஏறத்தாழ சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
