தமிழகத்தில் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன. இதனிடையே நாஞ்சில் சம்பாத்து சமீப காலமாக நடிகர் விஜய் இன் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஏற்கனவே விஜய் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக பேசியதாலையே திமுக வின் அறிவு திருவிழாவுக்கு நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஆதரவாக பேசியதால் திமுக தனக்கு அழைப்பு விடுக்கவில்லை. திமுகவுக்கு தமிழக வெற்றி கழகம் தான் சவாலாக இருக்கும். அந்த உண்மையை தான் நான் சொன்னேன். திமுகவுக்கு அதிமுக சவாலாக இருக்காது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 13 இடங்களில் மூன்றாவது இடத்தையும், ஒரு தொகுதியில் டெபாசிட்டையும் இழந்தது.

ஒரு தொகுதியில் மட்டும் நான்காவது இடத்திற்கு சென்றது. அதனால்தான் திமுகவிற்கும் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி என்று நான் கூறினேன். தம்பி விஜய் கட்சி ஆரம்பித்த உடன் பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் என்று அவர் சொன்னவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் கட்சி கொடியில் தமிழர்களின் அடையாளமாக இருக்கும் யானை,போருக்கு செல்லும்போது தமிழ் மன்னர்கள் சூடிக்கொள்ளும் வாகை பூக்கள் இடம்பெற்றுள்ளன.
இவையெல்லாம் விஜய் கட்சி கொடியில் இருக்கும் படி செய்ததை எனக்கு மனநிறைவை தந்தது. இது தமிழ் பண்பாட்டை நோக்கிய நல்ல அடையாளமாக நகர்வாக நான் கருதுகின்றேன். கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு கிடைத்த வெற்றி. அடுத்த அடியை எப்படி எடுத்து வைப்பது என கலங்கி நிற்கும் தமிழக வெற்றிக்கலகம் கட்சிக்கு ஒரு வாசலை உச்சநீதிமன்றம் திறந்து வைத்துள்ளது என நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். இவர் திடீரென விஜய்க்கு ஆதரவாக இவ்வாறு பேசியுள்ளது அவர் விஜய் கட்சியில் இணைய போகிறார் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்தி உள்ளது.
