தமிழகத்தில் அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான திட்டம் தான் சுகி, zomato மற்றும் அமேசான் போன்ற ஆன்லைன் சார்ந்த தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்காக இ ஸ்கூட்டர் மானிய திட்டம். இந்த திட்டத்தில் டெலிவரி வேலைகளை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களும் பயன்படலாம். 20000 ரூபாய் வரை மானியம் வழங்கப்படும். தகுதியானவர்கள் இந்த திட்டத்திற்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்.
இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மானியம் பெறுவதற்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் அல்லது டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் மானியம் பெறுவதற்கு மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் பதிவு பெறாத கிக் தொழிலாளர்களும் நல வாரியத்தில் பதிவு செய்யவும் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
