மோடியின் வீரத்தை பார்த்து பயந்துபோயிட்டார் டிரம்ப்… அதனால தான் வரியை குறைத்தார்… சொல்கிறார் நயினார்..!!

By Soundarya on கார்த்திகை 13, 2025

Spread the love

பிரதமர் நரேந்திர மோடியின் வீரத்தைப் பார்த்து பயந்து அமெரிக்கா அதிபர்  வரியை குறைத்து இருப்பதாக நயனார் நாகேந்திரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தலைப்பில் பாஜக சார்பாக பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த 11 வருடங்களில் தமிழ்நாட்டுக்கு 16 லட்சம் கோடி கொடுத்தது பிரதமர் மோடி என்பது யாராலும் மறந்துவிட முடியாது. முன்பெல்லாம் இந்தியா என்றால் ஏளனமாக அலட்சியமாக பார்ப்பார்கள்.

ஆனால் இப்போது இமிகிரேஷன் ஆபீஸில் நம்முடைய பாஸ்போர்ட்டை நீட்டினால் இந்தியாவா? என்று யாரும் கேட்பதில்லை மோடியா? மோடியா? என்று கேட்கிறார்கள். இஸ்ரேல் பிரச்சனையில் பிரதமர் மோடி பேசியதை பார்த்து இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருள்களுக்கு 5% அதைப்பற்றி கவலைப்படாமல் இந்திய பொருட்களை அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளுக்கு பிரதமர் அனுப்பினார். அதன் விளைவாக இந்தியாவில் இருந்து வரும் அனைத்து பொருட்களுக்கும் 50 சதவீதத்திலிருந்து வரியை குறைக்க போகிறேன் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அப்படி என்றால் பிரதமர் வீரத்துடன், தைரியத்தோடு செயல்படுகிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.