குஷியோ குஷி… தமிழகத்தில் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு… அரசு சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on கார்த்திகை 12, 2025

Spread the love

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டன. அத்துடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த வருடம் பொங்கல் பரிசு பொருட்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

அதேசமயம் மக்களுக்கு பணமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2026 பொங்கல் என்பது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வருவதால் தமிழக மக்களை கவரும் வகையில் பணம் மற்றும் கூடுதல் பரிசு பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.