“அந்த ஒரு படத்தால் வேலை இல்லாமல் இருந்தேன்…” ஆனா என்னோட சாதனை அதுதான்…! மனம் வருந்தி பேசிய இயக்குனர் சுந்தர்.சி…!!

By Devi Ramu on கார்த்திகை 12, 2025

Spread the love

இயக்குநர் சுந்தர்.சி, தான் 2003 ஆம் ஆண்டு கமல்ஹாசனை வைத்து இயக்கிய ‘அன்பே சிவம்’ திரைப்படம் குறித்துப் பேசிய பழைய நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் பேசிய சுந்தர்.சி, ‘அன்பே சிவம்’ வெளியான நேரத்தில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றும், அது திரையரங்குகளில் வணிக ரீதியாக தோல்வி அடைந்ததாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

ஒரு சிறந்த படைப்பு அப்போது தோல்வியைச் சந்தித்ததன் காரணமாக, தான் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக சுந்தர்.சி குறிப்பிட்டார். அதன்பிறகு, ‘கிரி’ என்ற ஒரு முழுக்க முழுக்க கமர்ஷியல் திரைப்படத்தை இயக்கிய பின்னர்தான், மீண்டும் தான் திரையுலகில் ஒரு இயக்குநராக நிலைபெற முடிந்தது என்றும் அவர் விளக்கினார். ஆனாலும், இப்போதும் கூட ‘அன்பே சிவம்’ போன்ற ஒரு படத்தைத் துணிந்து எடுக்கும் மனநிலையில் தான் இல்லை என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

   

மீண்டும் அப்படி ஒரு படத்தைத் தான் எடுத்தால், ஒரு வருடம் வீட்டிலேயே உட்கார வேண்டிய சூழல் வரும் என்றும், அதன்பிறகு ஐந்து அல்லது பத்து வருடங்கள் கழித்துத்தான் அந்தப் படம் பாராட்டப்படும் என்றும் அவர் வருத்தத்துடன் கூறினார். அவர் கூறியதாவது, அத்தகைய படங்களை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் முழுமையாக ஏற்றுக்கொள்ள எப்போது தயாராக இருக்கிறார்களோ, அப்போது தான் தான் அதுபோன்ற திரைப்படங்களை மீண்டும் இயக்குவேன்.

   

இப்போது எடுத்தால் தயாரிப்பாளர் நஷ்டமடைய நேரிடும். அந்தக் கஷ்டத்தை தான் அனுபவித்ததால் தயாரிப்பாளருக்கு ஏற்படுத்த விரும்பவில்லை.  ‘அன்பே சிவம்’ நினைத்து நினைத்துப் பெருமைப்படக்கூடிய ஒரு திரைப்படம். எனது பேரக்குழந்தைகள் தனது சாதனையைப் பற்றிக் கேட்டால், ‘அன்பே சிவம்’ என்ற ஒரு படத்தைக் கொடுத்தேன் என்று தான் பெருமையாகக் கூறுவேன் என்றும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.