தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெறும் 5 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் மும்முரமாக வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தமுறை தேர்தலில் திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்கு முனைப்போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விசில் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று முன்னதாக தமிழக வெற்றிக் கழக கட்சியும் விசில் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. திமுக கூட்டணியில் மநீம இருக்கும் காரணத்தால் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே விசில் சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரத்திலும் பேசப்படுகிறது.
