திடீர் திருப்பம்… பாஜக போட்ட ஸ்கெட்ச்… கூண்டோடு கட்சியில் இணைந்த முக்கிய புள்ளிகள்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

By Nanthini on கார்த்திகை 11, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகிறது. இபிஎஸ் தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டு விட்டாலும் பாஜக ஆட்சி எப்படியாவது தமிழகத்தில் அமைய வேண்டும் என்பதில் டெல்லி தலைமை உறுதியாக உள்ளது. இதனால் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழக பாஜகவில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் இன்று இணைந்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளதால் பாஜக விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி பேச்சு வார்த்தைகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கட்சி விட்டு கட்சித் தாவும் நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது தமிழக பாஜக இளைஞரணி தலைவர் S.G. சூர்யா முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.